நடிகை காஜல் அகர்வால் தமிழ்சனிமாவில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் இந்தியிலும் நடித்து வந்தார்.
இவர் நடிப்பில் வெளியாகியுள்ள பாரிஸ், பாரிஸ் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது இதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
அதுமட்டுமல்லாமல் நடன இயக்குனர் தாராவின் ஹுஸ்னா மக்கா என்ற திரைப் படத்திலும் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சரய என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படி தொடர்ச்சியாக நடித்த வந்த காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிட்சிலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் கடந்த 30ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளத்தில் தாங்கள் எப்படி காதலிக்க தொடங்கினேன் என்ற தகவலை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தார், இந்த நிலையில் கொரோனா காலகட்டத்திலும் நடிகை காஜல் அகர்வால் மாலத்தீவில் ஹனிமூன் சென்றுள்ளார்.
ஹனிமூனுக்கு சென்ற காஜல் அகர்வால் தினமும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார், இந்த நிலையில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அறையில் மீன்களுடன் மீனாக தங்கியிருப்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் ஹனிமூனுக்கு எவ்வளவு செலவு செய்து உள்ளார் என்ற தகவல் தற்பொழுது தெரிய வந்துள்ளது, ஹனிமூனுக்கு காஜல் அகர்வால் இதுவரை 40 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர்களுக்கு இது ஒரு பிரச்சனையா என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.