நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், மேலும் தமிழில் இவர் கடைசியாக கோமாளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் காஜல் அகர்வால் கௌதம் என்பவருடன் கடந்த மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தீயாய் பரவியது, அது மட்டுமில்லாமல் இருவரும் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்கள் புதுமண தம்பதிகள்.
இந்த நிலையில் மாலத்தீவில் இருந்து திரும்பி வந்துள்ளார்கள் புதுமண தம்பதிகள். காஜல் அகர்வால் ஆச்சாரியா படத்தின் சூட்டிங்கில் மீண்டும் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார் அவருடன் காஜல் அகர்வால் இணைந்து நடிக்க இருக்கிறார் அதற்காக தன்னுடைய கணவருடன் அந்த சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் காஜல் அகர்வால். அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.