கைதி, விக்ரம்- மை தொடர்ந்து லியோ – விலும் அந்த மாஸ் சீன் இருக்கு.! பேட்டியில் உண்மையை உளறிய லோகேஷ் கனகராஜ்.!

vikram kaithi leo

kaithi vikram movie scene in leo : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின்  என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து பாடல்கள், போஸ்டர் என வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இப்படி ஒவ்வொரு நாளும் லியோ திரைப்படத்திலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகி ரசிகர்களை பரபரப்பில் வைத்து வருகிறார்கள் பட குழு. இந்த நிலையில் லியோ திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாக்கியது. லியோ திரைப்படத்தின் டிரைலர் இரண்டு நிமிடம் 43 வினாடிகள் அதேபோல் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிஷங்கள் என லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் அறிவித்து இருந்தார்.

ரஜினியின் இந்த திரைப்படம் தான் லோகேஷ் க்கு பிடிக்குமா.! ஒருவேளை தலைவர் 171 மெஹா ஹிட் திரைப்படத்தின் இரண்டாவது பாகமா.?

ட்ரெய்லர் வெளியாகி பல சாதனைகளை செய்தது. அதுமட்டுமில்லாமல் ட்ரெய்லர் அதிக சண்டை காட்சிகள் இதுவரை பார்க்காத விதத்தில் விஜய் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருந்தார். இப்படி ட்ரெய்லரை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள் இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள்  பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் லியோ படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

kaithi
kaithi

அப்பொழுது தொகுப்பாளினி லோகேஷ் அவர்களிடம் கைதி திரைப்படத்திலும் பிரியாணி சீன் இருந்தது. அதேபோல் விக்ரம் திரைப்படத்திலும் பிரியாணி சீன் இருந்தது லியோவில் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் அவர்கள் இது நான் வேணுமென்றே வைக்கவில்லை ஆனால் ரசிகர்கள் இந்த மாதிரி காட்சிகளை விரும்புவதால் லியோ திரைப்படத்திலும் நிச்சயம் இருக்கிறது என வெளிப்படையாக பேசி உள்ளார்.

சென்சாரில் துண்டிக்கப்பட்ட முக்கிய காட்சி இதுதான்.? இது மட்டும் இருந்தா படம் வேற லெவல் தான்…

இந்த நிலையில் ரசிகர்கள் ஆசைப்பட்டது போல் கைதியில் பிரியாணி, விக்ரமிலும் பிரியாணி சீன் இருக்கிறது என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் படத்தை பார்ப்பதற்காக. மேலும் எந்த மாதிரி காட்சியில் பிரியாணி சீன் வரப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.