ஈ அடிச்சான் காப்பி லிஸ்டில் அட்லீயை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்..! என்னடா இது கைதி திரைப்படத்திற்கு வந்த சோதனை..!

kaithi

தமிழ் சினிமாவில் காப்பி இயக்குனர் என்று போற்றப்படுபவர் தான் அட்லீ. தற்போது இவருடன் லோகேஷ் கனகராஐயும் ஒப்பிட்டு பேசியதன் காரணமாக தயாரிப்பாளர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் அட்லீ இவர் ஆர்யா நடிப்பில் உருவான ராஜாராணி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார்.

இவ்வாறு இவர் இயக்கிய முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக இதனை தொடர்ந்து  தளபதி விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுவிட்டார் அந்த வகையில் ராஜா ராணி திரைப்படம் மௌனராகம் திரைப்படத்தின் காப்பி எனவும் ரசிகர்கள் குற்றத்தை முன்வைத்துள்ளார்கள்.

தற்போது இவரைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஐயும் மினி அட்லீ என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது இந்நிலையில் இந்த திரைப்படத்தை இந்தியில் எடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கைது 2 திரைப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த திரைப்படத்தை வேறு மொழியில் எடுப்பதற்கும் அடுத்த பாகம் எடுப்பதற்கும் நீதிமன்றமானது தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனெனில் இந்த திரைப்படத்தின் கதையை ராஜீவ் ரஞ்சன் தான் எழுதி உள்ளாராம் இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தை எஸ்ஆர் பிரபு தான் ஒப்புதல் வாங்கி முன்தொகை 10,000 கொடுத்துள்ளார்கள்.

lokesh kanagaraj-1
lokesh kanagaraj-1

ஆனால் இதை அனைத்தையும் மறைத்துவிட்டு லோகேஷ் கனகராஜ் வைத்து இந்த திரைப்படத்தை எடுத்து விட்டதாக புகார் அளித்துள்ளார் இதன் காரணம் மேலும் அதே கதையை வைத்து இரண்டாம் பாகம் எடுப்பது மிக தவறான விஷயம் ஆகையால் நஷ்ட ஈடாக எஸ்ஆர் பிரபு நாலு கோடி வழங்க வேண்டும் என ராஜீவ் ரஞ்சன் புகார் அளித்துள்ளார்.

sr prabu

இப்படி ஒரு நிலையில் ஒரு செய்தி சேனல் கைதியிடம் களவாடிய கதை கைதி மினி அட்லீ லோகேஷ் கனகராஜ் என தலைப்பு கொடுத்து இந்த செய்தியை வெளியிட்டு உள்ளார்கள் இதனால் கடுப்பான நமது தயாரிப்பாளர் ஒரு வழக்கின் முழு விவரம் அறியாமல் இப்படி ஒரு பொய்யான தகவலை வெளியிட வேண்டாமென பதிவினை வெளியிட்டு உள்ளார்.

lokesh kanagaraj-2