மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது, அதுமட்டுமில்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது, படத்தில் பாடலும் கிடையாது, நடிகையும் கிடையாது ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. அதுமட்டுமில்லாமல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கதாநாயகனை மட்டுமே நம்பி வெளியானது, படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார் அதேபோல் ஒளிப்பதிவு சத்தியம் சூரியன், படத்தகுப்பு பிலோமினா ராஜ் அவர்கள் பணியாற்றி இருந்தார்கள், படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனத்தில் எஸ்ஆர் பிரபு தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படம் விஜய் நடிப்பில் உருவாகிய பிகில் திரைப்படம் வெளியாகி பொழுது வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூலை பெற்றது, அதேபோல் இந்த திரைப்படத்தின் மூலம் கார்த்தியின் திரைப்பயணம் மேலும் ஒருபடி உயர்ந்தது. இப்படியிருக்க கைதி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது யார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன் முதலில் இந்த கதையை எழுதும்போது மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் படத்தின் கதையை எழுதினாராம், அதன் பிறகு படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வேண்டுகோள் விடுத்ததால் நடிகர் கார்த்தியை ஹீரோவாக நடிக்க வைத்தார்களாம். கார்த்தி நடித்து மிகப்பெரிய ஹிட் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை பார்த்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறது படக்குழு.