இணைய தளத்தை அலறவிடும் கைதி 2 போஸ்டர்..! டில்லி – ரோல்ஸ் மிரட்டல்..

kaithi-2
kaithi-2

சிவகுமாரின் இரண்டாவது மகன் கார்த்தி சினிமா உலகில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக கார்த்தி நடித்த விருமன் படம் கூட கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்து இருந்த நிலையில் தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பொன்னியன் செல்வன் படத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர்.

மேலும் படத்தில் கார்த்தி நடிப்பு பெரிய அளவில் இருப்பதாக சொல்லி பாராட்டி தள்ளி வருகின்றனர் இது இப்படி இருக்க..  கார்த்தி அடுத்த அடுத்த படங்களையும் ரிலீஸ் செய்ய இருக்கிறார். வருகின்ற தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் படம் வெளியாக இருக்கிறது.  அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து கைதி 2 படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதை அண்மையில் அவரே உறுதிப்படுத்தினார்.. மேலும் கைதி 2 படம் சின்ன பட்ஜெட் படம் கிடையாது மிகப் பெரிய பட்ஜெட் படம் நிச்சயம் நானும், சூர்யாவும் வரும் காட்சிகள் பெரிய அளவில் இருக்கும் என கார்த்தி சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்கள் புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.. போஸ்டரை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என கூறி கமாண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி அசத்தி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் கைதி 2  ஃபேன் மேட் போஸ்டர்..

kaithi-2
kaithi-2