கைதி 2 திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக களமிறங்கும் சந்திரமுகி பட நடிகர்.! சபாஷ் சரியான வில்லன் தான்..

kaithi 2

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழில் தோல்விகளை காணாத இயக்குனர்களில் ஒருவர் இவரை தமிழ் சினிமா உலகிற்கு அடையாளம் காட்டி கொடுத்தது கைதி படத்தின் மூலம் தான் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.  கைதி திரைப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருப்பார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து  தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அது மட்டுமல்லாமல் பல தயாரிப்பாளர்கள் இதுபோல் இயக்குனர் படத்தை இயக்கினால் எங்களுக்கு லாபம் வரும் எனவும் கூற ஆரம்பித்தார்கள் அந்த அளவு விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. அதுமட்டுமில்லாமல் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பட குழுவில் உள்ள பலருக்கு கமல் பரிசு கொடுத்தார்.

இத நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய் அவர்களை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை முடித்த பிறகு கைதி இரண்டாவது பாகத்தையும் இயக்க முடிவு செய்துள்ளார். தளபதி 67 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் ஒரு காட்சியில் வருவார் எனக் கூறப்படுகிறது ஒருவேளை அது விக்ரம்  படத்தின் தொடர்ச்சியா அல்லது விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்தது போல் ஒரு கதாபாத்திரத்திலா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் கைதி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் லோகேஷ் யுனிவர்ஸ் ரோலக்ஸ்  கதாபாத்திரம் போல் ராகவா லாரன்ஸ் இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தற்பொழுது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுடைய அதிகரித்துள்ளது ஏனென்றால் ரஜினி சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்திருந்ததால் மாபெரும் ஹிட்அடித்தது அதேபோல் இரண்டாவது பாகம் ராகவா லாரன்ஸ் நடித்து வருவதால் எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய அதிகரித்துள்ளது.

ragava larance
ragava larance