தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் பல முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தையும் 2020ஆம் ஆண்டு விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.
2019ஆம் ஆண்டு வெளியாகிய கைதி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள்தான் கதை எழுதி இயக்கியிருந்தார். மேலும் படத்தை எஸ் ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்தார்கள். படத்தில் கார்த்திக் மற்றும் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.
ஹீரோயினே இல்லாமல் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மேலும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ்,தீனா, ரமணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இது திரைப்படம் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பார்ட் வருவதுபோல் முடிந்திருக்கும்.
அதனால் கைதி இரண்டாவது பாகம் எப்போது என ரசிகர்கள் எப்பொழுதும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம். இதுவரை மவுனம் காத்து வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்கள்.
அப்பொழுது ஒரு நிருபர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் மீண்டும் எப்பொழுது பிரியாணி எடுத்துக்கொண்டு டெல்லி வருவார் என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு கூடிய சீக்கிரம் வருவார் என பதிலளித்துள்ளார் அதனால் கைதி இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேலும் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது ஏனென்றால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது.