புதிய வீடு பார்த்து குடியேற கிளம்பிய கதிர் – முல்லை.. ஆசிர்வாதம் செய்து வழி அனுப்பிய குடும்பத்தினர்.! யார் யார் தெரியுமா.? இன்றைய ப்ரோமோ.

pandian store
pandian store

விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த சீரியலாக பல எபிசோடுகளை கடந்து டிஆர்பி யிலும் தொடர்ந்து டாப்பில் இருந்து வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். இதில் நான்கு அண்ணன் தம்பி என அனைவரும் கூட்டு குடும்பமாக..

ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் யார் கண்ணு பட்டதோ என தெரியவில்லை. தற்போது மூர்த்தியின் குடும்பம் சின்னாபின்னமாகி நிற்கிறது. வீட்டில் உறவினர்கள் மாறி மாறி சண்டை போட்டதால் வேறு வழி இன்றி கதிர்முல்லை வீட்டை விட்டு வெளியேற உடனே மூர்த்திக்கு நெஞ்சுவலி..

வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி தற்போது தான் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர் முல்லை இருவரும் தற்போது தனது மாமியார் வீட்டில் உள்ளதால் வேறு வீடு பார்த்து செல்ல வேண்டும் என்பதற்காக கதிர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறார்.

இந்த நிலையில் முல்லை தனது தாலியை கழட்டி கொடுத்து இதை வச்சு வேற வீடு பாருங்கள் என முல்லை சொன்னதும் . கதிர் முதலில் மறுத்து பின்பு வேறு வழி இல்லாமல் அதை வாங்கி தற்போது புதிய வீடு பார்த்துள்ளனர். அங்கு கதிர் முல்லை இருவரும் சென்று கொண்டிருக்கும் போது வழியில் தனத்தை பார்த்ததால் முல்லை அக்கா என கூப்பிட தனம்.

இறங்கி வர கதிர் சாவியை கீழே போட்டு  அண்ணியிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல் சாவியை எடுத்துள்ளார்.  தனமும் இவர்களது புது வாழ்க்கைக்கு ஆசீர்வாதம் செய்து வழி அனுப்பித்துள்ளார். இப்படியான புரோமா தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து வெளியாகி உள்ளது.