Vijay : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி இருப்பதால்..
படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மதியில் அதிகரித்து காணப்படுகிறது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல் இப்படி அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் விஜய் கைகோர்ப்பதால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்போ வெற்றியை கொடுக்கும் விஜய் ஆரம்பத்தில் பல படங்கள் தோல்வி படங்களாக கொடுத்தார் அந்த சூழலில் பாசில் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் காதலுக்கு மரியாதை இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருப்பார் மேலும் சிவகுமார், ஸ்ரீ வித்யா, ராதா ரவி என பலர் நடித்து இருந்தனர்.
காதலுக்கு மரியாதை படம் வெளிவந்து மிகபெரிய வெற்றி பெற்றது. இந்த படம் இப்பொழுதுமே பலருக்கும் பிடித்த திரைப்படமாக இருந்து வருகிறது இந்த நிலையில் காதலுக்கு மரியாதை படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் கிடையாதாம்..
90களில் பிரபலமான நடிகராக இருந்த “அப்பாஸ்” தான் முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தாராம் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக கடைசியாக விஜய் இந்த படத்தில் கமிட் ஆனார் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து முன்னேறி இப்போ இந்த இடத்தில இருக்கிறார் விஜய்.