அட நம்ம காதலர் தின பட நடிகையா இது.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

sonali
sonali

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் திரைப்படம் என்றாலே அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில்  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்தான் பம்பாய். இந்த பம்பாய் திரைப்படத்தில் அம்மா அம்மா என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியவர தான்  நடிகை சோனாலி.

இவர் பம்பாய் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தமிழில் நடிகர் குணால் நடிப்பில் வெளியாகிய காதலர் தினம் திரைப் படத்திலும் அர்ஜுன் நடித்து வெளியாகிய கண்ணோடு காண்பதெல்லாம் என்ற திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் புற்று நோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவரே அறிவித்து இருந்தார்.

இவர் தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிவித்தார் என்று அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதன்பிறகு ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தார்கள். சோனாலி புற்றுநோய் சிகிச்சைக்காக நியூயார்க் சென்று  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறார்.

தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்த உறவினர் மற்றும் நண்பர்கள் பலரும் எனக்கு போன் செய்து ஆறுதல் கூறி வந்தது உறுதுணையாக இருந்தது எனவும். தன்னுடைய தோழிகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு நான் தற்பொழுது இப்படி தான் இருக்கிறேன் என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளார்.

sonali
sonali

அவர்கள் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் கள் ஏனென்றால் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு தலையில் முடி இல்லாமல் மொட்டை அடித்துக்கொண்டு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார். இவர் 2002ஆம் ஆண்டு இயக்குனர் கோல்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த சோனாலி தற்பொழுது இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

sonali
sonali