தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் ஷங்கர் தற்பொழுது இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வந்தார் ஆனால் சில இக்கட்டான சூழ்நிலை காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்தான் காதலன். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா மற்றும் கதாநாயகியாக நக்மா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.
இந்த காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவை ஒரு போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்து தும்சம் செய்வார் பெண் போலீஸ். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது துணை நடிகையான கவிதா ஸ்ரீ தான். காதலன் திரைப்படத்திற்கு பிறகு பல்வேறு கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் மறைந்த எஸ்பிபி பாலசுப்ரமணியம் பிரபுதேவாவின் அப்பாவாக நடித்து இருந்தார்.
இந்தநிலையில் கவிதா ஸ்ரீ என்ற துணை நடிகை பெண்களை வைத்து பார்ட்டி நடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ம் தேதி சனிக்கிழமை ECR சாலையில் உள்ள கானத்தூர் என்ற பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் நள்ளிரவில் பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றார்கள் அந்த பகுதியில் பண்ணை வீட்டின் முன்பே மெயின் கதவை உள்புறம் பூட்டுப் போட்டுக் கொண்டு இருந்துள்ளார்கள்.
அதன்பிறகு போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மதுபோதையில் பெண்களும் ஆண்களும் அரைகுறை ஆடையில் நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்கள் இதில் 15 ஆண்களும் 11 பெண்களும் மொத்தம் 26 பேர் மதுபோதையில் ஜாலியாக இருந்துள்ளார்கள் இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார். விசாரணையில் அந்த பார்ட்டி நடைபெற்ற இடத்தில் சிக்கிய பெண் தான் நடிகை கவிதா ஸ்ரீ.
அந்த பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து அவரிடம் இருந்து உள்வாடகைக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் என கொடுத்து இந்த பார்ட்டியை நடத்தி வந்துள்ளார்கள் கடந்த இரண்டு மாதங்களாக இந்த பண்ணை வீட்டில் சொகுசு பார்ட்டி நடத்தி வந்துள்ளார் கவிதா, பார்ட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் அக்கவுண்டில் 1599 ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும் அதிலும் பெண்களுக்கு அனுமதி இலவசம் இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விளம்பரம் செய்துள்ளார் கவிதா ஸ்ரீ. கவிதா ஸ்ரீ போலீசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.