Vadivelu : பரத், சந்தியா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, ரொமாண்டிக் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து வெற்றி பெற்றது இந்த படத்தில் வரும் காமெடிகள் அனைத்துமே சூப்பராக இருக்கும் முக்கிய காரணம் சுகுமார் தான்.
ஆம் இந்த படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து கைதட்டல் வாங்கினார் இந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்துள்ளார் இரண்டு படங்களை அவர் இயக்கியும் அசத்தியுள்ளார் இப்படிப்பட்ட சுகுமார் சமிப காலமாக சினிமா உலகில் தென்படவே இல்லை திறமை இருந்தும்..
இவர் தென்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துகிறது. இந்த நிலையில் சினிமாவில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் காமெடி சுகுமார். அவர் சொன்னது.. குறிப்பாக தனக்கு வடிவேலு செய்த மோசமான காரியத்தை பகிர்ந்து உள்ளார்..
தன்னை சந்தித்து பாராட்டியும்.. தன்னை ஆள் வைத்து அடித்தும் ஓட விட்டவர் வடிவேலு என பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் வடிவேலுவை சந்தித்த போது பழி தீர்த்ததாகவும் தெரிவித்துள்ளார் ஏவிஎம் தியேட்டரில் சிங்கம் களம் இறங்கிடுச்சு என்ற காட்சியில் வடிவேலு நடித்திருப்பார்.
அப்பொழுது என்னை தாண்டி சென்ற போது எல்லோரும் வடிவேலுவை பார்த்து எந்திரிச்சாங்க நான் மட்டும் கால் மேல் கால் போட்டு வடிவேலுவை பார்த்தேன் என்னை பார்த்தவுடன் அவர் அப்படியே அந்த பக்கம் சென்று விட்டார் அந்த நாலு பட போஸ்டர்லையும் என்னோட போட்டோ இருந்துச்சு என்று காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.