2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய திரைப்படம் தான் காதல் இந்த திரைப்படத்தில் நடிகர் பரத் நடித்தார் ஹீரோயினாக சந்தியா நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை சங்கர் அவர்கள் தான் தயாரித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தில் பரத், சந்தியா அவர்களை தாண்டி சுகுமார், தண்டபாணி சரண்யா, சூரி என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தின் மூலம் தான் சந்தியா சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இருந்து சந்தியாவை அனைவரும் காதல் சந்தியா என அழைக்கத் தொடங்கினார்கள் அந்த அளவு சந்தியாவின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
காதல் திரைப்படத்திற்கு பிறகு சந்தியா ஒருசில திரைப்படங்கள் மட்டுமே நடித்தார். அவர் நடித்த திரைப்படங்களான டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா என ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக வரவேற்பைப் பெறாததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதனால் சென்னையில் ஐடி கம்பெனி நடத்தி வந்த வெங்கட் சந்திர சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது இந்தியாவுக்கு 27 வயதும் அவருடைய கணவருக்கு நாற்பத்தி ஒரு வயதும் இருந்தது அந்த அளவு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டார். இதோ சந்தியாவின் மகள் புகைப்படம்.
இதை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் சந்தியாவை உரித்து வைத்து இருக்கிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.