வயசு இல்லன்னு காதல் திரை படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நடிகை.!

2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் பரத் சந்தியா சுகுமார் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் காதல். இதை திரைப்படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் அதுமட்டுமில்லாமல் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது மேலும் 2004 ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதான பிலிம்பேர் விருதினை தட்டிச்சென்றது.

காதல் திரைப்படத்தின் மூலம் தான் பரத் சினிமாவில் மிகவும் பிரபலம் அடைந்தார் என்று கூட கூறலாம் அதேபோல் சந்தியா இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த வரை யாராலும் மறுக்க முடியாது அவருடைய பெயர் சரண்யா நாக் 1998 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர் சினிமாவில் முதன் முதலாக காதல் கவிதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் காதல் திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தார் அதேபோல்  காதல்  திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டது இவரை தான். ஆனால் இவரை பார்ப்பதற்கு மிகவும் சின்ன பெண் போல் இருந்ததால் இவர் செட்டாக மாட்டார் என இயக்குனர் வேண்டாம் என சொல்லிவிட்டாராம்  இருந்தாலும் காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடிக்க வைத்தாராம் இயக்குனர்.

kadhal barath
kadhal barath

இவர் காதல் திரைப்படத்திற்கு பிறகு துள்ளுற வயசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ஒரு வார்த்தை பேசு, 10th கிளாஸ் என பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் ஆனால் இவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் பெரிதளவு வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை அதன் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார் 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய பேராண்மை திரைப்படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்தார்.

ஆனாலும் இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு அமையவில்லை அப்படி இருக்கும் நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் துணை கதாநாயகியாக எந்த ஒரு தயக்கமும் காட்டாமல் நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kadhal movie
kadhal movie