விஜய் தொலைக்காட்சியில் காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் இவர் காமெடியனாக வலம் வந்தார் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து படத்திற்கு வெற்றி மாலையை சூடி உள்ளார். இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் சந்தானம் நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என உறுதிமொழி எடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் வெற்றி என்றே கூறலாம் அந்த வகையில் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் டிக்கிலோனா இந்த திரைப்படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்தில் சந்தானம் அனேகா, யோகி பாபு என பல நட்சத்திர நடிகர்களும் நடித்திருந்தார்கள்.
மேலும் டிக்கிலோன திரைப்படத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தில் மாறன் அவர்கள் தன்னுடைய காமெடியால் அசத்தியிருந்தார். அதனால் மாறன் நடித்த காட்சிகளை இன்னும் வைத்திருக்கலாம் என பலரும் விமர்சனம் கூறி வந்தார்கள்.
காதல், காமெடி, டைம் ட்ராவல் என ஒரு சயின்ஸ் பிக்ஷன் காமெடி திரைப்படமாக உருவாகியிருந்தது இந்த டிக்கிலோனா இந்த டிக்கிலோனா திரைப்படத்தின் மூலம் மாறன் மற்றும் அஹானா என இருவரும் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்கள். டிக்கிலோனா திரைப்படத்தில் இளையராஜாவின் பாடலை ரீமிக்ஸ் செய்து வைத்திருந்தார்கள் அதாவது ‘பெயர் வச்சாலும் வைக்காம போனாலும்’ என்ற பாடல் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.
அதிலும் இந்த பாடலில் குறிப்பிட்ட வகையான ‘காதல் மன்னன்’ என்ற வரியில் அஹானா போட்ட ஸ்டெப் பலரையும் கவர்ந்தது. பலரும் இந்தப் பாடலில் இந்த வரிக்கு ரீல் செய்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் சீரியல் நடிகையும் குரூப் டான்ஸருமான ஹேமாவும் இந்த பாடலுக்கு ரீல் செய்து அசத்தியுள்ளார்.
இந்தப் பாடலுக்கு அவர் போட்ட ஸ்டேப் பலரையும் கவர்ந்துள்ளது ஹேமா பல பாடல்களில் குரூப் டான்ஸராக பங்கேற்றுள்ளார் அதிலும் இவர் குரூப் டான்ஸராக நடனமாடுவது பலரையும் பார்க்க வைத்துள்ளது இந்த நிலையில் கடைசியாக இவர் ரகிட ரகிட என்ற பாடலில் சஞ்சனாவின் நடனத்திற்கு பிறகு இவரின் ஆட்டத்தை தான் பலரும் ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.