காதல் பட நடிகைக்கா இப்படி ஒரு நிலைமை.! அதுவும் தற்கொலை முயற்சியா.? ரசிகர்கள் அதிர்ச்சி

saranya-1
saranya-1

காதல் பட சரண்யா தனது குழந்தை பருவத்தில் பாலியல் வன்முறை நடந்ததால் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் சந்தியா நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் காதல். இந்த படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு எந்த அளவு இருக்கு பிரபலம் கிடைத்ததோ அதேபோல் சந்தியாவின் தோழியாக நடித்த சரண்யாவும் பிரபலமானார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்ற நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை திரைப்படத்தில் ஜெயம் ரவியை ஒருதலையாக காதலிக்கும் மாணவியாக நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் சரியான படங்கள் அமையவில்லை எனவே இதன் காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகிய இவர் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று இருக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல கரடு முரடான பாதைகளை பற்றியும் அதில் எப்படி மீண்டும் வந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, குழந்தை பருவத்தில் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கூட என்னிடம் தப்பாக நடந்து கொண்டார்கள் அதை தடுக்கும் தைரியம்கூட அன்று என்னிடம் இல்லை அம்மாவிடம் போய் கூட சொல்ல முடியவில்லை காரணம் அம்மாவுக்கும் இதே நிலைமைதான் இது போன்ற பிரச்சனைகள் எனக்கு ஒரு நாள் இரண்டு நாள் நடக்கவில்லை ஏன் தான் பொண்ணாக பிறந்தோமோ என நினைக்கும் அளவுக்கு இருந்தது.

27 வயது வரைக்கும் இது போன்ற ஆண்களை மட்டும் தான் சந்தித்தேன் சக பெண்கள் அனைவரும் என்னுடைய நிதிநிலை ஸ்டேட்டஸ் பற்றி மட்டும் தான் பார்க்கிறார்கள் என்றார். இதனை அடுத்து அம்மா சரியாக வழி நடத்தி இருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கலாம் என பலர் என்னை பற்றி நினைத்து இருக்கலாம் ஆனால் இந்த சமூகம் என்னுடைய அம்மாவை மிகவும் கடுமையாக நடத்தியது பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கு தெரியும்? அம்மா எப்படியோ அப்படி தான் பொண்ணு என சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.

எப்பொழுதுமே என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு அதிசயம் நடக்கும் என நான் எதிர்பார்த்தேன் எந்த இடத்தில் எல்லாம் நான் சறுகினேனோ அந்த இடங்களில் இருந்து என்னை யாராவது ஒருவர் தனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதில் மிகவும் தன்னம்பிக்கையாக இருந்தேன் பலரோட வாழ்க்கை கூட தப்பு தப்பா தான் இருக்கும் அவர்கள் நினைக்கலாம் இந்த பெண்ணுக்கு நல்லவர்கள் கிடைத்தார்கள் அதனால் முன்னேறி வந்து விட்டது என ஆனால் அப்படி இல்லை இந்த சமுதாயத்தில் எல்லாவிதமான மனிதர்கள் கலந்து தான் இருக்கிறார்கள் நீங்கள் தான் அதில் சரியானவர் யார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதற்கு முதலில் நீங்கள் உங்கள் பிரச்சனைகளில் இருந்து வெளிவர வேண்டும் எனக்கு அப்படி சில நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள் கடந்த 2020ஆம் ஆண்டு வைதேகி எனும் பத்திரிக்கையாளர் எனக்கு போன் செய்து இருந்தார். கொரோனா காலகட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பற்றி நீ போட்டு இருக்குற ஏன் ஒரு ஆர்டிகிள் எழுதக்கூடாது என்று கேட்டார் சரண்யா பொன்வண்ணனுக்கு பதிலாக எனக்கு போன் பண்ணிட்டீங்க போல என்றேன் அதற்கு அந்த அக்கா இல்லை தான் உன்னை தான் பேட்டி எடுக்க போகிறேன் என்றார்.

saranya
saranya

அதுதான் என் வாழ்க்கைக்கு மறுபடியும் பிள்ளையார் சுழி போட்டது அதை பார்த்து பல யூடியூப் சேனல்களும் என்னை பேட்டி எடுத்தார்கள் அதற்கு பிறகு தான் என்னுடைய சில நாளும் நண்பர்கள் மூலம் சொந்தமாக புஷ்காரா ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினேன் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து வாழ்க்கையில் நீங்க தப்பே செய்ததில்லையா செய்து அதிலிருந்து மீண்டும் வந்ததில்லையா என்று கேட்டால் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தப்பு செய்து இருப்பார்கள் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு லவ், ரிலேஷன்ஷிப் இதையெல்லாம் கண்டிப்பாக சந்தித்திருப்பார்கள். இவ்வாறு எந்த பிரச்சனையை வந்தாலும் வாழ்க்கையில் தைரியமாக இருக்க வேண்டும் அதேபோல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற முயற்சியும் இருக்க வேண்டும் என பல தகவல்களை சரண்யா பகிர்ந்துள்ளார்.