2006 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் காதல் இந்த திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் என பலர் நடித்திருந்தார்கள், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது, அதேபோல் வசூலிலும் புதிய மைல்கல்லை தொட்டது, இந்த திரைப்படத்திற்கு 2004 ஆம் ஆண்டு பிலிம்பேர் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வாங்கியது.
இந்த திரைப்படத்தில் மோட்டார் மெக்கானிக் கடையை பரத் வைத்திருப்பார், அதேபோல் தன்னுடைய முழு வேலையும் மோட்டார் மெக்கானிக் தான், அப்போது திடீரென சந்தியாவை சந்திக்கிறார் அவர்மீது காதல் கொள்கிறார், அதேபோல் பரத்தும் அவள் மீது காதல் கொள்ள இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக வாழ்வதற்கு முடிவு செய்கிறார்கள்.
அப்பொழுது பரத்தின் நண்பன் அனைத்து உதவிகளையும் செய்கிறார், இதனை தெரிந்து கொண்ட சந்தியாவின் பெற்றோர்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் என அழைத்து பின்பு பரத்தை அடித்து சித்திரவதை செய்து வருகிறார்கள் சிறிது காலம் கழித்து முருகன்(பரத்) பைத்தியமாக தெருக்களில் சுற்றித் திரிகிறார், ஆனால் சந்தியா பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக மறுமணம் செய்து கொண்டு வாழ்கிறார். இந்த திரைப்படத்தில் மெக்கானிக் ஹெல்பர் ஆக வேலை செய்து ஒருவர் பொடிப் பையன்.
இவர் பெயர் அருண் குமார் இவர்தான் பரத்தின் ஹெல்பர் இவனது காமெடிக்கு திரை அரங்கமே அதிர்ந்தது சிரித்தது, அதிலும் டீயில் எச்சி துப்பி கொடுப்பது. அதன் பின்பு ஃபுல் பெப்சி கொடுப்பது என அனைத்து காமெடியும் ரசித்து பார்த்தார்கள் ரசிகர்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அந்த பொடி பையன் விஜயின் சிவகாசி, ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
அதன் பின்பு படவாய்ப்பு அமையவில்லை இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.