பாடலாசிரியர் கபிலனின் மகள் திடீர் தற்கொலை.! திரை பிரபலங்கள் அதிர்ச்சி..

kabilan
kabilan

சினிமாவில் சமீப காலமாக தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல் சீரியல்களிலும் இது போல் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இது சினிமா உலகினரை மிகப்பெரிய பாதிப்படையை செய்து வருகிறது.

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரை பிரபலங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்   கவிஞர் கபிலன் இவர் எழுதிய பாடல்கள் ஹிட் வரிசையில் சேர்ந்துள்ளன.

அதேபோல் கபிலன் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் தனி ரகம் அந்த அளவு கபிலன் எழுதும் பாடலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. மேலும் கபிலரின் கை வரிசையில் பல திரைப்பட பாடல்கள் ஹிட் அடித்துள்ளது இந்த நிலையில் கபிலனின் மகள் சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் அவரது சொந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

kabilan daughter
kabilan daughter

பிரபல தனியார் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது கபிலனின் மகள் ஒரு மாத நாளிதழில் எடிட்டர் ஆக பணியாற்றி வந்தார் ஆனால் இவர் திடீர் என்று இப்படி செய்து கொண்டது சினிமா பிரபலங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் கபிலனுக்கு வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

kabilan daughter
kabilan daughter