ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இதில் தமன்னா, ரஜினிகாந்த் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.
தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டம், தலைவரின் ஸ்டைல் போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ளது எனவே யூடியூப் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் உள்ளிட்ட அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் 10ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இந்த படத்தில் ரஜினி நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.
Kajal Aggarwal edition #Kaavaalaa @mskajalaggarwal @anirudhofficial @sunpictures @tamannaahspeaks #GenerativeAI #muonium pic.twitter.com/wydz6AYbTU
— Senthil Nayagam (@senthilnayagam) July 11, 2023
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் அடுத்த இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருக்கிறது. அப்படி சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் சிங்கள் பாடலான காவாலா என்ற பாடலில் தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இணைந்த ஆட்டம் போட்ட நிலையில் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.
This is just brilliant 😍😍😍 love @SimranbaggaOffc #bigfan https://t.co/K0agh3R4Tp
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 11, 2023
இதற்கு பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் நடிகை தமன்னாவும் இதற்கான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் லைக் குவிந்தது. அந்த வகையில் தற்போது இந்த பாடலில் முன்னணி நடிகைகளான சிம்ரன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பது போல் தமன்னாவின் வீடியோவில் எடிட் செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். சிம்ரனுக்கும் காஜல் அகர்வாலுக்கும் இந்த வீடியோ சிறப்பாக அமைந்திருப்பதாக பலரும் கூறிவரும் நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.