விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் செவன் ஸ்கிரீன் லலித்குமார் மற்றும் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் காத்துவாக்குல 2 காதல் இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா வாங்க பார்க்கலாம்.
காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் கதை
விஜய் சேதுபதி ராம்போ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் குடும்பத்தின் மீது மிகப்பெரிய சாபம் இருக்கிறது அதனால் குடும்பத்தில் யாருக்கும் திருமணமே நடக்காமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள் அப்படி இருக்கும் இந்த நிலையை போக்குவதற்காக விஜய்சேதுபதியின் தந்தை ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் அப்பொழுது அவர்களுக்கு ராம்போ குழந்தையாகப் பிறக்கிறார்.
ராம்போ பிறந்தவுடன் ராம்போ வின் தந்தை இறந்துவிடுகிறார் இதற்கெல்லாம் காரணம் சாபம்தான் என பலரும் கூறி வருகிறார்கள். அதே போல் கணவரின் இறப்பை தெரிந்துகொண்ட ராம்போவின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் மகனை தவிர அனைத்தையும் மறந்து விடுகிறார் பிறக்கும்போதே தந்தையின் இறப்பிற்கு காரணமாகி விட்டார் என ராம்போ வை துரதிஸ்டவாலி என முத்திரை குத்துகிறார்கள்.
நாம் அம்மாவுடன் இருந்தால் அவருக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என எண்ணி அம்மாவை பிரிந்து வாழ கற்றுக்கொண்டார் ராம்போ. சிறிது காலம் போய் இளமை பருவத்தை அடைந்து ராம்போ பகலில் கால் டேக்சி ஓட்டுநராக இரவில் பவுன்சர் ஆகவும் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரையும் விஜய் சேதுபதி ஒரே நாளில் பார்க்கிறார் அவர்கள் மீது காதலில் விழுகிறார்.
இருவருடன் நன்றாக பழகி வருகிறார் விஜய் சேதுபதி பின்பு இருவரும் ஒரே நேரத்தில் காதலை விஜய் சேதுபதியிடம் கூறுகிறார்கள். இதுவரை துரதிஸ்டவாலி என நினைத்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி வாழ்க்கையில் நல்ல நேரம் வந்து விட்டது போல் உணருகிறார் அதனால் அவர் எதிர்பார்க்கும் விஷயங்கள் நடக்க ஆரம்பித்து விடுகிறது.
அதேபோல் விஜய்சேதுபதி நயன்தாராவை காதலிக்கும் விஷயம் சமந்தாவிற்கு தெரிந்துவிடுகிறது அதுமட்டுமில்லாமல் சமந்தாவை காதலிக்கும் விஷயம் நயன்தாராவிற்கு தெரிந்துவிடுகிறது அதனால் இருவரும் இணைந்து நீ காதலிக்க வேண்டும் என்றால் யாரையாவது ஒருவரை தான் காதலிக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
அதன்பிறகு விஜய் சேதுபதி யாரை காதலித்தார் யாரை திருமணம் செய்து கொண்டார் என்பதுதான் மீதி கதை.
96 திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் ஸ்கோர் செய்துவிட்டார் அதுமட்டுமில்லாமல் படத்தில் தனி ஒருவனாக தாங்கி நிற்கிறார் இரு பெண்களிடம் காதலில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஆண் நிலைமைதான் இந்த திரைப்படம் என்பதை அழகாக காட்டியுள்ளார் விக்னேஷ் சிவன். அதேபோல் சென்டிமென்ட், டயலாக் ,பாசம் நேசம், நகைச்சுவை என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார்கள்.
கண்மணி யாக வந்த நயன்தாராவும் காதி ஜாவா வந்த சமந்தாவும் தன்னுடைய நடிப்புத் திறமையை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்கள். அதேபோல் கண்மணியின் தங்கை தம்பியாக வரும் இருவரின் நடிப்பும் சினிமாவில் வரவேற்கத்தக்கது அதுமட்டுமில்லாமல் ரெடின் கிங்ஸ்லி நடிகர் பிரபு படத்தில் முக்கிய தூண்களாக இருக்கிறார்கள்.
அதேபோல் ஸ்ரீசாந்த் நடிப்பும் கலா மாஸ்டர் நடனமும் படத்தில் பிளஸ் ஆக அமைந்தது மீண்டும் தனது வெற்றியை பதித்துள்ளார் விக்னேஷ் சிவன் எனவும் பலரும் கூறி வருகிறார்கள். மேலும் தான் எடுத்துக் கொண்ட கதை எந்த ஒரு விதத்திலும் தவறாகப் போய்விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக அழகான கதையை இயக்கி உள்ளார்.
அதேபோல் அனிருத் இசையில் பாடல்கள் பிரபலம் அடைந்துள்ளது. ஆக மொத்தத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.