தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் வருடத்திற்கு அரைடஜன் திரைப்படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். மேலும் சமீபகாலமாக விஜய் சேதுபதி திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை இந்தநிலையில் எப்படியாவது ஹிட் திரைப்படத்தை கொடுத்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென மாமனிதன் திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடித்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் காற்றுவாக்கில் இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்தின் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த நிலையில் இந்த டிரைலரில் ஒரு காட்சியை வைத்து விஜய் படத்தில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவனை அங்கே இங்கே என பல திரைப்படங்களை காப்பி அடித்து தான் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தை எடுத்து இருக்காங்களா என விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் ட்ரெய்லரில் ஒரு காட்சியில் கோவிலில் விளக்கு அமைவது போல் தெரியும் உடனே நயன்தாரா சமந்தா மற்றும் விக்னேஷ் சிவன் மூவரும் அந்த விளக்கை அணையாமல் கையை வைத்து பார்த்துக் கொள்வார்கள் இதே காட்சிதான் குஷி திரைப்படத்தின் விஜய் மற்றும் ஜோதிகா விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்வார்கள்.
அந்த காட்சியை அப்பட்டமாக விக்னேஷ் சிவன் காற்றுவாக்கில் இரண்டு காதல் படத்தில் வைத்துள்ளதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த 2 திரைப்படத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.