தமிழ்சினிமாவில் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது அவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் சிறந்த கதைக்களம் இருந்தால் எதிலும் நடிப்பார் நிதர்சனமான உண்மை. அவர் பல மொழிகளில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு நானும் ரவுடிதான் என்ற வெற்றிப் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ஹீரோயின்களாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அனைவரும் அறிந்ததே இந்நிலையில் சமந்தா படத்தில் கமிட் ஆகியதால் மனதிலும் கேள்வி எழும்பியது.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த சமந்தா அவர்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் என்னிடம் கதை சொன்ன விதமும் கதாபாத்திரமும் சற்று வித்தியாசமாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அது மட்டுமில்லாமல் இப்படத்தில் இரண்டு திறமையான நடிகர்கள் நடிக்க உள்ளனர் இவர்களது திறமைகளுடன் என்னுடைய திறமையை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வேன் என தெரிவித்துள்ளார் சமந்தா.