தமிழில் ஹீரோ, வில்லன் குணசித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி கொடுப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடித்த சில படங்களிலேயே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தவர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல், டிரெய்லர் என அனைத்தும் வெளியாகி மக்களிடையே படத்தின் கதை பற்றிய சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி இருந்த நிலையில் இந்த படம் நேற்று ஏப்ரல் 28ஆம் தேதியன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து டாப் நடிகைகள் ஆன நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். மேலும் இதில் விஜய் சேதுபதி இருவரையும் காதலித்து வருவதாக கதைகளம் உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மூவரும் இதற்கு முன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளில் இந்த படம் தமிழகத்தில் சுமார் 5. 20 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில் சென்னையில் மட்டும் 66 லட்சம் வசூல் வேட்டை நடத்தியது.
சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் சென்னையில் முதல் நாளில் 62 லட்சம் வசூல் நடத்திய நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தை பின்னுக்கு தள்ளி காத்துவாக்குல 2 காதல் படம் சாதனை படைத்துள்ளது.