தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்துடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா இவர் தற்பொழுது பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இருவரும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் காதலித்து மட்டும் வருகிறார்கள்.
இந்தநிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது.
இந்த நிலையில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் எழுதிய நான் பிழை என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் நயன்தாராவை நினைத்து உருகி உருகி எழுதியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அனிருத் இசையில் தரவே மற்றும் சாஷா திருப்பதி குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் தவறு இல்லை. நீ இல்லை நான் பருவமழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை.ஆழியில் இருந்து அலசி எடுத்து என அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே.இந்த பாடல் ரசிகர்களிடம் விளங்கி வருகிறது.