தமிழ் சினிமாவுலகில் நடிகர் விஜய் சேதுபதி படிப்படியாக முன்னேறிவர். சினிமா எப்படிப்பட்டது எந்த கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் மற்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால் தன்னை நம்பி வரும் படங்களில் எந்த கதாபாத்திரம் மிக சிறப்பாக இருக்கிறது.
அந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அதனால் தமிழ் சினிமா உலகில் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி வில்லன், குணச்சித்திரம், கெஸ்ட் ரோல் போன்ற கதாபாத்திரங்களை அருமையாக இருந்தது நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக இருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தன ஒரு வெற்றியை போராடி வந்தவர் விஜய் சேதுபதி இந்த நிலையில்தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி.
நடித்த இந்த படம் முழுக்க முழுக்க காதல், காமெடி, ரொமாண்டிக் என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் வசூலில் பட்டையை கிளப்புகிறது இதுவரை உலக அளவில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 55 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் 55 கோடி வசூல் செய்து இதுவே முதல் முறை என சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.