எதற்கும் துணிந்தவன் படத்தின் வசூல் சாதனையை முக்கிய இடத்தில் முறியடித்த காத்து வாக்குல ரெண்டுகாதல்.! எங்கு தெரியுமா.?

kaathu vaagula rendu kadhal
kaathu vaagula rendu kadhal

சினிமாவுலகில் சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் பலரும் எடுத்த உடனேயே டாப் நடிகர் நடிகைகளுக்கு கதை கூறி சிறப்பான படத்தை எடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இளம் இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன்.

முதலில் டாப் நடிகர்களில் ஒருவரான சிம்புவை வைத்து போடா போடி என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் பின்பு சூர்யாவுடன் கைகோர்த்து தானாசேர்ந்தகூட்டம் போன்ற ஹிட் படங்களை எடுத்து அசத்தியவர்.

இந்த படங்களை தொடர்ந்து தனது காதலி நயன்தாரா மற்றும் சமந்தா விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை உருவாக்கி வந்தார். இந்தத் திரைப்படம்  சில தினங்களுக்கு முன்புதான் திரையரங்கில் வெளியாகி தற்போது கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நாளுக்கு நாள் இந்த படத்தை காண திரையரங்கிற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றன. மேலும் சென்னையிலுள்ள தேவி திரையரங்கிற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ரசிகர்களுடன் படத்தை காண வந்துள்ளனர்.

அப்போது திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டியும் கொண்டாடினார்கள். இந்த படம் வசூலிலும் நல்ல பணத்தை ஈட்டி வருகின்றன. USA பாக்ஸ் ஆபிசில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் 150 428 வரை இரண்டே நாளில் வசூல் செய்துள்ளது

இதன்மூலம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 148 588 வசூல் செய்திருந்த இந்நிலையில் அந்த படத்தின் சாதனையை தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் முறியடித்துள்ளது.