இயக்குனர் விக்னேஷ் சிவன் இக்கால கட்டங்களில் உள்ள ரசிகர்களை நன்கு புரிந்து கொண்டு அவர்களுக்கு பிடிக்கும்படி காமெடி காதல் கலந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அப்படி எடுத்த உடனேயே டாப் நடிகர் நடிகைகளுக்கு கதை கூறி சிறந்த படங்களை இயக்கி வருகிறார்.
மேலும் விக்னேஷ் சிவன் இயக்குனராக மட்டுமின்றி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்கள் அனைத்தும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படி அமைந்தன. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.
மேலும் தற்போது விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த 62-வது திரைப்படத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் தனது காதலி நயன்தாரா மற்றும் சமந்தா விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார்.
இந்த படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியாகி கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும் நாளுக்கு நாள் இந்த படத்தை காண ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் வந்த வண்ணமே இருக்கின்றன. படம் எதிர்பார்த்த அளவு வசூலையும் குவித்து வருகின்றன.
இதனால் படக்குழு மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறது இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆகி இரண்டு வார முடிவில் தமிழகத்தில் மட்டும் சுமார் 36 கோடிக்கும் மேலாக வசூல் செய்து வருகிறது இனிவரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.