தளபதி 67 படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த கைதி பட நடிகர்.! இந்த படம் பாக்கலைனா இது புரியாது.?

thalapathy-67
thalapathy-67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் கமல் அவர்கள் தன்னுடைய விஸ்வரூபத்தை காண்பித்ததால் முன்னணி நடிகர்களுக்கு சற்று பயத்தை கொடுத்துள்ளது.

அதனை தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலக அளவில் கவனம் பெற்றார். இதனாலே இவருடைய அடுத்த படத்திற்கு ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

ஏற்கனவே விஜய் வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இதனை தொடர்ந்து மறுபடியும் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் தற்போது விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

இதை அடுத்து லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருக்கிறார் இந்த படத்தின் சூட்டிங் இந்த வருட இறுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் ஒரு முக்கிய ரகசியத்தை நடிகர் நரேன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதாவது தளபதி 67 குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு பதில் அளித்த நரேன் விக்ரம் திரைப்படத்தை பார்த்தால் தான் தளபதி 67 படத்தின் கதை புரியும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் இதன் மூலம் விக்ரம் திரைப்படத்தின் தொடர்ச்சி தான் தளபதி 67 என்று தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கைது திரைப்படத்தின் தொடர்ச்சியாக விக்ரம் திரைப்படத்தின் கதை இருந்தது அனைவருக்கும் தெரிந்தது அதேபோல தற்போது விக்ரம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக தளபதி 67 திரைப்படம் தொடங்க உள்ளது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.