டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் சீசன் 2.. ரிலீஸ் தேதி இதோ.!

kana kaanum kaalngal
kana kaanum kaalngal

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒரு சில சீரியல்கள் நிறைவடைந்து பல வருடங்கள் ஆனாலும் அது ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்து இருக்கும்.

மேலும் அந்த சீரியல்கள் இரண்டு, மூன்று பாகங்கள் என ஒளிபரப்பாவதும் உண்டு. அப்படி தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டிஆர்பியில் முன்னணியும் வகித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2008ஆம் ஆண்டுலிருந்து சில வருடங்களாக ஒளிபரப்பான சீரியல் தான் கனா காணும் காலங்கள். இந்த தொடர் பள்ளியில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை மையமாக வைத்தும் அழகான நண்பர்களின் உறவினை மையமாக வைத்தவும் இந்த சீரியல் உருவாக்கப்பட்டது. தங்களது லட்சியங்களை அடையும் பாதையை தேட 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியே செல்கின்றனர். எனவே இவர்கள் செல்ல அடுத்த புது மாணவர்கள் பள்ளியில் இணைகிறார்கள்.

இவ்வாறு முழுக்க முழுக்க பணியில் உள்ள நண்பர்களின் ஒற்றுமை, சண்டைகள், சச்சரவுகள் என பலவற்றையும் மையமாக வைத்து கனா காணும் காலங்கள் சீரியல் உருவாக்கப்பட்டது. இந்த சீரியலை பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி மற்றும் ரவிக்குமார் ஆகியவர்கள் இணைந்து இயக்கினார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியல் நிறைவடைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு கனா காணும் காலங்கள் வெப் சீரியலாக கடந்த ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது. அதேபோல் சீசன் 2 வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ரிலீஸ்சாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.