தமிழ் சினிமாவில் பல மெகா ஹிட் திரைப்படங்கள் வேறு ஒரு ஹீரோவுக்காக எழுதப்பட்டு பின்னர் அதில் வேறு ஒரு நடிகர் நடித்து ஹிட் ஆனது வழக்கம்தான். இயக்குனர் கௌதம் மேனன் வெற்றித் திரைப்படங்களை இயக்கி மாபெரும் ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித், சூர்யா, சிம்பு அவர்களை வைத்தும் திரைப்படம் இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் அப்படிதான் இவர் இயக்கிய காக்க காக்க திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து விட்டது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருப்பார் மேலும் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஜோதிகாவை மனதில் வைத்து தான் எடுக்கப்பட்டதாம் ஆனால் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக யார் நடிக்க இருந்தார் என்பதை கேட்டால் தூக்கி வாரி போட்டுடும்.
முதலில் இந்த திரைப்படத்தில் விக்ரம் அல்லது அஜித் ஆகிய யாராவுது தான் நடிக்க இருந்தார்கலாம் ஆனால் முதலில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க விஜய் அவர்களிடம் கதை சொன்னார்கள் ஆனால் விஜய் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
எனவே கௌதம் மேனன் விஜய்க்கு கதை சொல்லும் போது அவற்றில் 80 சதவிகித கதையை மட்டும் தான் சொன்னாராம் மீதி கதையை சொல்ல வில்லையாம் முழு கதை மற்றும் க்ளைமாக்ஸ் என்னவென்று கூறுங்கள் என்று கூறியபோது அவர் என்னுடைய கதை எப்பொழுதுமே ஹீரோவைப் பொறுத்து மாறுபடும் என கூறி இருந்தாராம்.
இதன் காரணமாக விஜய் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம் பின்னர் அஜித் விக்ரம் ஆகியோர்களும் பிஸியாக திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக இந்த திரைப்படத்தில் ஜோதிகா மூலமாக சூர்யா கதாநாயகனாக களமிறங்கினார்.