20 வருடத்திற்கு பிறகு மீண்டும் களத்தில் குதித்த கே எஸ் ரவிகுமார்..!! குடும்ப திரைப்படம் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

ks-ravikumar
ks-ravikumar

k.s.ravikumar produce a movie after 20 years: முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சூரியா போன்றவர்களை வைத்து பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள். தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.

மேலும் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் கடைசியாக 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன், தேவயானி, ஜோதிகா, போன்ற சில நடிகர், நடிகைகளை வைத்து தயாரித்து இயக்கி வெற்றி கொடுத்த திரைப்படமானது தெனாலி என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் உரிமத்தை பெற்றுள்ளாராம்.

இந்த திரைப்படத்தின் கதையானது வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இளைஞன் ஒருவன் தன் தந்தையை கிராமத்தில் தனியாக விட்டுச் செல்வதற்கு மனமில்லாமல் தன்னுடன் அழைத்து செல்கிறார். ஆனால் வெளிநாட்டில் தந்தை தனியாக இருப்பதை உணர்ந்த அவர் தந்தைக்காக ரோபோ ஒன்றை வாங்கி தருகிறார். அந்த ரோபோவுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்படும் உறவு தான் இந்த திரைப்படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தினை கேஎஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாகவும், மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றவர்களை பற்றி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ksravikumar2
ksravikumar2