இலங்கை தமிழரான பிக் பாஸ் தர்ஷன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்னில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார் அதில் பிரபலமடைந்தது தொடர்ந்து வெள்ளித்திரையில் தற்போது படவாய்ப்புகளும் கிடைத்துள்ளது அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கூகுள் குட்டப்பா. இந்த படத்தில் தர்ஷன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் இந்த படத்திற்கு கூகுள் குட்டப்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கே எஸ் ரவிகுமார் தயாரித்து உள்ளார். கே. எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குனராக இருந்த சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கி உள்ளனர். இந்தப் படத்தில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பிளாக் பாண்டி உள்பட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது பேசிய இந்த படத்தில் நாயகன் தர்ஷன் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது : இந்த நாளுக்காக ரொம்ப நாள் காத்திருந்தேன் மகிழ்ச்சியாக இருக்கிறது என்னை விட எனது அம்மா, அப்பா தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள்.
படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். படத்தில் ஒரு காட்சியில் ரவிக்குமார் சாரின் காலை பிடித்து பேசுவது போல் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் அந்த காட்சி எனக்கு சரியாக வரவில்லை உடனே ரவிக்குமார் சார் டேய் இங்க வா சேரில் உட்காரு என்று கூறிவிட்டு முட்டிப்போட்டு காலை பிடித்து நடித்த காட்டினார்.
இதை என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நினைவு இப்படி இந்த படத்தில் நிறைய மறக்க முடியாத பல அனுபவங்கள் எனக்கு கிடைத்தது . முதல் படத்திலேயே படக்குழு எனக்கு அதிகம் சுதந்திரம் கொடுப்பது கே எஸ் ரவிக்ககுமார் சார் தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு பெற்று தந்தார் என கூறினார்.