நடிகர் அஜித்குமார் சினிமாவுலகில் ஆரம்பத்தில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்த இருந்தாலும் அண்மை காலமாக இவரது திரைப்படங்கள் வெற்றியை ருசிப்பதோடு மட்டுமல்லாமல் ஓரளவு நல்ல வசூலை அள்ளி விருக்கின்றன இதனால் அஜித்தின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்பொழுது தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அந்த படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜீத் குமாரை பற்றி பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன் அவர் சொன்னது :
நடிகர் அஜித்குமார் விசுவாசம், விவேகம், நேர்கொண்டபார்வை படங்களுக்கு 40 கோடி சம்பளம் வாங்கி வந்தார். அந்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் 60 கோடி உயர்த்திய ஒரு படத்திற்கு 100 கோடி தற்போது கேட்கிறார்.
தொடர்ந்து ஒரு நடிகன் தனது படங்கள் வெற்றியை பெறவில்லை என்றால் சம்பளத்தை குறைக்க வேண்டும். அஜித் 40 கோடி சம்பளம் வாங்கும் போது அவரது படங்கள் வெற்றி பெறவில்லை அதை அஜித் நன்கு உணர்ந்திருந்தார் அப்படி என்றால் சம்பளத்தை குறைத்து அடுத்த படத்திற்கு 25 கோடி வாங்கி இருக்க வேண்டும் ஆனால் அதை செய்யவில்லை.
சம்பளத்தை உயர்த்தி ஒரு படத்திற்கு தற்போது 100 கோடியில் சம்பளம் கேட்கிறார். அஜித் வீடு தேடி கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் முதலில் சொல்வது சம்பளம் நூறு கோடி ஓகே நான் உள்ளே வா இல்லைனா போ அதுபோல இயக்குனர்களை அனுப்பி விடுவதாக இயக்குனர் கே ராஜன் தெரிவித்தார்.