ஒரு காலகட்டத்தில் சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன் இவர் சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர். இந்த நிலையில் சமீபகாலமாக நடிகைகளைப் பற்றியும் நடிகர்களைப் பற்றிய கிசுகிசுக்களை வெளியிட்டுக் கொண்டே வருகிறார். அதுமட்டுமில்லாமல் நடிகை கஸ்தூரி மிஸ் மெட்ராஸ் பட்டம் வாங்கியது அட்ஜஸ்ட் செய்து தான் என கூறினார்.
இதை பார்த்த கஸ்தூரி பண்ணி என்று அவரை கூறி கடுமையாக பதிலடி கொடுத்தார் இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் கே ராஜன் யூடியூபில் பேசுவதற்கு பணம் கேட்டதால் அவரை யாரும் இப்போ அழைப்பதில்லை என பயில்வான் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கே ராஜன் பேசியதாவது. ஒரு பண்ணி நான் யூ-டியூபில் பேசுவதற்கு பணம் கேட்பதாக சொல்கிறது அந்த பண்ணி நான் வைத்த பெயர் கிடையாது.
நடிகை கஸ்தூரி அவர்கள்தான் வைத்தது அந்த பண்ணி கஸ்தூரியை கூட மிகவும் கேவலமாக விமர்சனம் செய்தது. அதுமட்டுமில்லாமல் அந்த பண்ணி நடிகை கஸ்தூரி அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் விருதை வென்றார் எனவும் கூறியுள்ளது. தொடர்ந்து பேசிய ராஜன் அவர்கள் கொஞ்சம் கூட வெட்கம், மானம், ஈனம், ஒரு தாய் வயிற்றில் பிறந்தவன் என்று நமக்கும் ஒரு பெண் இருக்கிறதெ, நம் மனைவியும் ஒரு பெண்தான் என்ற எண்ணம் இல்லாமல் தாயுள்ளம் இல்லாத அரக்கன் போல் சினிமாவில் இருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளையும் நடிகர்களையும் கீழ்த்தரமாக பேசுகிறானே.
ஏதோ இவன் ரகசியத்தை வெளியிடுவது போல், கூடவே இருந்து அனைத்து வேலைகளையும் செய்தது மாதிரியும் மாமா வேலை பார்ப்பது மாதிரியும் பேசுகிறான். தயாரிப்பாளர் கே ராஜன் பணம் கேட்டதால் தான் எல்லா யூடியூப் சேனலும் அவரை ஒதுக்கி விட்டது என சொல்லுகிறான் டேய் என்ன எதுக்குடா ஓதுகிறார்கள் நான் புண்ணியம் செய்வதற்காக காமராஜர் பெயரில் மெட்ரிகுலேசன் பள்ளி நடத்துகிறேன் நான் கஷ்டப்பட்டு காமராஜர் கொடுத்த இலவச கல்வியில் படித்தவன் என்னை போன்று கஷ்டப்படும் மாணவர்களுக்கு படிக்க உதவி செய்கிறேன்.
ஒரு கோயில் யானை குளத்தில் குளித்துவிட்டு அலங்காரம் செய்துகொண்டு கோயிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது அப்பொழுது குறுக்கே சேற்றில் விழுந்து பண்ணி ஒன்று வந்து கொண்டிருக்கிறது அதை பார்த்த யானை நம்மீது சேறு பட்டு விடும் என ஒதுங்கி கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தது அதனால் பன்னியை பார்த்து பயந்து விட்டதாக கருதக் கூடாது. யாராவது ஒருத்தன் பத்தாயிரம் கொடுத்தா போதும் அதை வாங்கிக்கிட்டு நடிகைகளை பற்றி இவன் என்னமோ விளக்கு பிடித்தவன் மாதிரி பேசறான் தம்பி வேண்டாம் உன் வீட்டில் உனக்கும் ஒரு பெண் இருக்கு அம்மா இருக்கு மனைவி இருக்கு தாய்மார்களை கேவலப்படுத்துவது தப்பு சோறு தான சாப்பிடுர இல்ல வேற ஏதாவது சாப்பிடுரியா.
என் உடம்பைப் பாரு எப்படி இருக்கு என காட்டாதே பன்றியும் தின்றுவிட்டு கொழுத்து போய் தான் இருக்கிறது என பயில்வனை வெளுத்து வாங்கியுள்ளார் ராஜன்.