மக்கள் அன்பா கொடுத்ததை நீ ஏன் பிச்சையெடுக்கிற? விஜய்யை விளாசிய தயாரிப்பாளர்..

vijay
vijay

Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தனது 70 வயதிலும் படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். சமீப காலங்களாக அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என பல நடிகர்களின் பெயர்கள் வைரலாகி வருகிறது. எனவே இதற்கு தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் பதிலடி கொடுத்தும் வருகிறார்.

அப்படி 70 வயதிலும் அதே சுறுசுறுப்புடன், ஸ்டைலுடன் எந்த ஒரு நடிகர் இருக்கிறாரோ அப்பொழுது அவரை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொள்ளலாம் என கலாநிதிமாறன் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது  கூறியிருந்தார். இந்நிலையில் ஜனவரி மாதம் நடைபெற்ற வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், “விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என கூறியிருந்தார்.

எனவே அப்பொழுதிலிருந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பறித்து விட்டாரா என்ற செய்தி சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருந்து  வருகிறது. அந்த வகையில் இதில் பல பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாகவும், மேலும் சில பிரபலங்கள் ரஜினிக்கு ஆதரவாகவும் பேசி வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் கே ராஜன் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இன்னைக்கு உன் படம் நாளைக்கு இன்னொருவர் படம் வசூல் அதிகமாக இருக்கும் அதுக்காக நீ சூப்பர் ஸ்டார் ஆகிவிட முடியுமா? உன் தோல்வி படங்களால் எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாகி இருக்காங்க தெரியுமா? இப்பொழுது வரை அவங்களால படம் எடுக்க முடிஞ்சுதா? மக்கள் அன்பாக கொடுத்த பதட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?

வாரிசு ஆடியோ லான்ஞ்சில் சரத்குமார் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அப்போதே விஜய் இல்லை என்று மேடையில் வந்து சொல்லி இருக்கலாம் அந்த பட்டத்திற்குரியவர் ரஜினிகாந்த் என்று சொல்லி இருந்தால் விஜய் புகழ் எங்கேயோ சென்று இருக்கும் என்று தயாரிப்பாளர் கே ராஜன் விஜய்யை விலாசி உள்ளார்.