கே. எல். ராகுலுக்கு பதில் இந்த வீரரை போடுங்கள்.. கொடுத்த சான்ஸ் எல்லாத்தையும் பயங்கரமா யூஸ் பண்றான்..! புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்

k.l.-rahul-
k.l.-rahul-

இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பை தொடரை தோற்றத்தை தொடர்ந்து இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது இளம் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் நியூசிலாந்து உடனான ஒரு நாள் போட்டியில் கோப்பையை நழுவி விட்டது.

இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணியை எதிர்த்து தொடர்களில் விளையாட இருக்கிறது இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மீண்டும் சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரீகார் தவான், முகமது ஷமி போன்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடியிருக்கும் தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட இருக்கிறார்.

துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டு இருக்கிறார் ஆனால் கே எல் ராகுல் சமீபகாலமாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் குறிப்பாக ஆசிய மற்றும் 20 ஓவர் உலககோப்பை போட்டியில் அவரது பேட்டிங் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது அத்துடன் கற்றுக் குட்டி அணிகளுக்கு எதிராக ரன் அடிப்பது பெரிய அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டிகளில் சொத போதுமாக இருந்து வருகிறார்.

அவருடைய பேட்டிங் சமீப காலமாக  சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மணிந்தர் சிங் கேள்வி எழுப்பி உள்ளார் அதாவது சுமாராக விளையாடும் துணை கேப்டனாக இருந்தால் நீக்க கூடாதா என்று எதுவும் சட்டம் உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் துணை கேப்டனாக இருந்தாலும் சுமாராக செயல்பட்டால் அவரை அதிரடியாக நீக்கிவிட்டு சுமன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார் அவர் சொன்னது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

கடந்த ஜிம்பாப்வே தொடரில் கேஎல் ராகுல் மந்தமாக செயல்பட்டது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது இருப்பினும் கிளாஸ் கிரிக்கெட் வீரரான அவர் அதிலிருந்து வெளியே வந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை அனைவரது விருப்பம் அதே சமயம் ஒரு நாள் தொடரில் 5, 6 ஓவர்கள் நீங்கள் அனைத்து நேரங்களிலும் மெதுவாக விளையாடி சோதனை முயற்சியை செய்து வீணடிக்க முடியாது எனவே 20 ஓவர் மற்றும் ஒரு நாள் என எந்த வகையான கிரிக்கெட் ஆக இருந்தாலும் பவர் பிளே ஓவர்களில் பயமின்றி அதிரடியாக விளையாடும் அணுகுமுறை அவர் பின்பற்ற வேண்டும்.

இல்லை எனில் நீங்கள் துணை கேப்டனாக இருந்தாலும் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் பேசி இருந்தார். அதேசமயம் சுமன் கில் மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமான க்ளாஸ் நிறைய வீரராக தோன்றுகிறார் அதனால் அவர் ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் என அனைத்து வகையான பார்மட்டிலும் விளையாட வேண்டும். கிடைத்த வரை அனைத்து வாய்ப்புகளும் அவர் அசத்தலாக செயல்பட்டுள்ளார் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக டெஸ்ட் போட்டிகளில் 3, 5 இடங்களில் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் செயல்படுவார் என கூறினார்.