சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஜோதிகா இவர் பிரபல முன்னணி நடிகர் சூர்யாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ஜோதிகாவின் காற்றின் மொழி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உலகின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சி ஆனது அக்டோபர் மாதம் 1ம் தேதி அன்று துபாயில் பிரமாண்டமாக திறக்கப்பட்டது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் இந்த கண்காட்சி 2022 மார்ச் மாதம் வரை தொடர உள்ளது.
மேலும் இந்த கண்காட்சியில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பங்கேற்பது மட்டுமல்லாமல் இந்தியா தன்னுடைய தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், சேவை துறை மற்றும் சினிமா கலாச்சாரம் போன்ற பல்வேறு வகையில் பங்கேற்க உள்ளது.
அந்த வகையில் இந்திய நாட்டின் சினிமாவை விளம்பரம் படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியான ficci flo என்ற நிறுவனம் ஆனது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளது. இந்த விழாவானது வருகின்ற 2002 ஜனவரி 18 மற்றும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
அந்த வகையில் துபாய் எக்ஸ்போவில் திருவிழாவின்போது ஜோதிகாவின் காற்றின் மொழி திரைப்படம் ஆனது திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா விதார்த் உடன் இணைந்து நடித்திருப்பார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை கண்ட சுபாஷ் காய் நடிகை ஜோதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுவரை வெளிவந்த செய்தியானது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் இதனை கொண்டாடி வருகிறார்கள்.