கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்.. நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட ஜோதிகா.!

jothika
jothika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜோதிகா சமீப காலங்களாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன் என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது 1998ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படம் ஒன்றின் மூலம் சினிமாவிற்கு நடிகை ஜோதிகா அறிமுகமானார். பிறகு இவருக்கு அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

வெகு நாட்கள் கழித்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சுமார் 25 வருடங்கள் கழித்து ஸ்ரீ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்த வருகிறார்.  இது பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் ஸ்ரீ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்புகள் கடந்த காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஜோதிகா நடிப்பதற்கான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. எனவே ஜோதிகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கனத்த இதயத்துடன் ஶ்ரீ படத்தில் எனது பகுதிகளை முடித்துவிட்டு அவர்களிடம் இருந்து விடைப் பெறுகிறேன்.

jothika 1
jothika 1

நான் பணியாற்றிய சிறந்த குழுவினர்களில் ஒரு டீம் தான் இந்த பட குழு இந்த அர்த்தமுள்ள சினிமாவில் என்னை ஒரு பகுதியாக மாற்றியதற்கும் மரியாதை செய்ததற்கும் துஷார் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் ஹீரோவான ராஜ்குமார் ராவ் அவர்களின் தீவிர ரசிகை நான் பாலிவுட் திரை உலகின் மிகச்சிறந்த நடிகர்களுடன் நடித்து எனது நடிப்பை பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது இந்த படத்தின் குழுவினர்களிடம் என இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.