பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த பட வாய்ப்பில் ஜோதிகா நடித்து பசூப்பர் ஹிட் பெற்றுள்ளது அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்று பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இந்த படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்குப் பிறகு அக்கட தேச படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
இவ்வாறு நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் கல்கியின் நாவலையும் மையமாக வைத்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.
இவ்வாறு பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் நடித்து மிரட்டி இருந்த நிலையில் தற்போது இவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றினை பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக அமைந்தது.
இந்த படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்த நிலையில் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம் ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக ஜோதிகா சந்திரமுகி படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். ஜோதிகா தனது சிறந்த நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்த நிலையில் இவருடைய சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
இவ்வாறு உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க முடியாமல் போயிருந்தாலும் ஜோதிகா நடித்திருந்தது நன்றாக இருந்ததாக ரசிகர்கள் கமெண்ட் கூறி வருகிறார்கள். ஜோதிகா அளவிற்கு சந்திரமுகி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்திருப்பாரா என்பது கேள்விக்குறி தான்.