சினிமா உலகில் ஒல்லியாக இருந்தால்தான் எந்த மாதிரியான உடையும் போட முடியும் பார்ப்பதற்கு செம அழகாக இருக்க முடியும் என நடிகைகள் நினைத்துக் கொண்டு இருந்தனர் அந்த இமேஜை உடைத்து கொழுக் மொழுக்கென்று இருக்கும் நடிகைகள் கூட சினிமா உலகில் நடிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியவர் ஜோதிகா.
90 காலகட்டங்களில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார். தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றியை கண்டார் அந்த படங்களில் கிளாமர் மற்றும் தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் அமைத்துக் கொண்டார்.
தொடர்ந்து சினிமாவில் பயணித்துக் கொண்டிருந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து வந்தார் ஒரு வழியாக குடும்பத்தார் சம்மதத்துடன் சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்து கொண்டனர் அதன் பின் சில வருடங்கள் சினிமா பக்கம் தென்படாமல் போனார்.
இதனால் ஜோதிகாவின் சினிமா பயணம் முடிந்தது என பலரும் கூறினார் ஆனால் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து தற்போது சோலோ படங்களில் நடித்து வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த ராட்சசி, 36 வயதினிலே, ஜாக்பாட் போன்ற பல்வேறு படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் படங்களையும் தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் இதனால் நாலாபக்கமும் ஜோதிகாவுக்கு பணம் வந்து கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஜோதிகா பள்ளி சீருடை அணிந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.