சோலோ ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு ஒரு சிலர் சினிமாவை விட்டு மொத்தமாக வெளியேறி விட்டார்கள் இன்னும் சிலர் திருமணத்திற்குப் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கமர்சியல் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஒருவர்தான் நடிகை ஜோதிகா இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து மீண்டும் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது இதனை தொடர்ந்து ஜோதிகா இவ்வாறு திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக தம்பி படம் வெளிவந்தது.
இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்திக்கும், சத்யராஜும் நடித்து இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஜோதிகா ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா.
ஆனால் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஜோதிகா நடித்து வரும் படங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு தடுமாறி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் மற்றொரு புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அதாவது நடிகர் சசிகுமார் உடன் இணைந்து சசிகுமாருக்கு தங்கச்சியாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டைமெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். ஒரே வயது உள்ள நடிகருக்காக தங்கச்சியாக நடிக்க உள்ளார் ஜோதிகா என கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.