சினிமாவில் நடிக்கும் போது காதலித்து பின் திருமணம் செய்து கொண்டவர்கள் விரல் விடும் என்னும் அளவுக்கு தான் இருக்கிறார்கள் அந்த லிஸ்ட்டில் இணைந்து உள்ளவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் நடிக்கும் பொழுது காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.
திருமணம் நடந்து பல வருடங்கள் ஆனாலும் இப்பொழுதும்.. அதே காதலுடன் தான் இருவரும் இருக்கின்றனர் அதை பல புகைப்படங்கள் உறுதிப்படுத்தியும் இருக்கின்றன. ஆரம்பத்திலிருந்தே இரண்டு பேருமே காதலை பெரிய அளவில் நம்பினார் காதல் முற்றி போய் ஒரு கட்டத்தில் சூர்யா தனது படங்களில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என பல தயாரிப்பாளர், இயக்குனர்களிடம் பிடிவாதம் பிடித்திருக்கிறாராம்.
அது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.. சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த உயிரிலே கலந்தது படத்தில் அதன் தயாரிப்பாளர் ஏகப்பட்ட ஹீரோயின்களின் புகைப்படங்களை சூர்யாவிடம் காட்டி இருக்கிறார் ஆனால் புகைப்படங்களில் இருந்த அத்தனை ஹீரோயின்களையும் ஒதுக்கிவிட்டு ஜோதிகா தான் வேண்டுமென சொன்னாராம்.
அதன் பிறகு நந்தா படத்தில் பாலாவிடம் ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினாராம் சூர்யா.. ஆனால் பாலாவை பற்றி தான் தெரியுமே அவர் முடிவு எடுத்தால் போதும் உடனே இந்த கதைக்கு லைலா தான் செட் அவர் என்று பாலா சொல்லி உள்ளார் இருந்தாலும் ஜோதிகாவை கமிட் பண்ணுங்க என்று திரும்பத் திரும்ப சூர்யா சொல்ல “என்ன எதுவும் லவ் மேட்டரா” என்று பாலா கேட்டாராம்.
அதன் பிறகு இது எதுக்கு வம்பு என்று சூர்யா அமைதியாகிவிட்டாராம்.. நந்தா படத்தை பார்த்து தான் கௌதம் மேனன் காக்க காக்க படத்திற்கு சூர்யாவை அணுகி உள்ளார் இந்த படத்திற்கும் ஜோதிகா தான் வேண்டும் என்று சூர்யா சொல்ல அதன் மூலம் இந்த ஜோடி கிளிப் ஆகி காதல் ஆகி திருமணமாகி செட்டில் ஆகியிருக்கிறது.