விஜயின் இரண்டு சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஜோதிகா.! இப்ப நினைச்சு கூட ரொம்ப வருத்தப்படுறாராம்..

jothika and vijay
jothika and vijay

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா இவர் தனது சினிமா பயணத்தை முதலில் வாலி படத்தின் மூலம் ஆரம்பித்தார் அதன் பிறகு நடிகை ஜோதிகா அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ரஜினி, கமல், சரத்குமார் என பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

மேலும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டு சினிமா உலகில் ஓடினார். ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.. 36 வயதை கடந்த பிறகும் நடிகை ஜோதிகா இப்பொழுதும் பல இடங்களில் அடித்து வெற்றி கண்டு வருகிறார்.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் ஜோதிகா விஜய் உடன் குஷி, திருமலை ஆகிய இரண்டு படங்களில் நடித்து உள்ளார். அந்த இரண்டு திரைப்படங்களுமே வெற்றி படங்கள் தான் ஆனால் அதன் பிறகு விஜய் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டு இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

சூர்யா, விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பிரண்ட்ஸ் இந்த திரைப்படத்தில் தேவயானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஜோதிகாவை தான் அணுகி உள்ளனர் ஆனால் சில காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போக கடைசியாக தேவயானியை நடிக்க வைத்தாராம்.

பல ஆண்டுகள் கழித்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் மெர்சல்..  இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதில் கிராமத்து விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருப்பார் ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்க தேர்வானது ஜோதிகா தானாம்..

சில காரணங்களால் இந்த படத்தையும் தவற விட்டு உள்ளார் என கூறப்படுகிறது. விஜயின் இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஜோதிகா இழந்ததை நினைத்து இப்பொழுதும் வருத்தப்படுகிறாராம்..