தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் பிளக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கான வேலைகள் தற்போது முன்புறமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் பட வாய்ப்பு ஒரு பிரபல நடிகை தவறவிட்டது குறித்து இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமான மீனா, ஜோதிகா, நயன்தாரா, சிம்ரன் என பல டாப் நடிகைகள் தொடங்கிய இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் இருந்தும் ஒரு டாப் நடிகை அஜித் படத்தை தவற விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிட்டிசன்.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மீனா, நக்மா, வசுந்தரா தாஸ், வினு சக்ரவர்த்தி, தேவன், நிழல்கள் ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். படம் விறுவிறுப்பாக பஞ்சம் இல்லாமல் இருந்ததால் படம் அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்றது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மீனா நடித்தார்.
ஆனால் உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது வேறொரு டாப் நடிகை என கூறப்படுகிறது. சிட்டிசன் படத்தின் பிரபல இயக்குனர் சரவண சுப்பையா முதலில் நடிகை ஜோதிகாவிடம் தான் கதையை கூறி இருக்கிறார் ஆனால் அவர் சில காரணங்களால் தவறவிடவே பிறகு மீனா அஜித்துடன் நடித்தார் என சொல்லப்படுகிறது இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.