jothika : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருபவர் ஜோதிகா. 35 வயதிற்கு மேலான இவர் இன்றும் இளமை குறையாமல் செம அழகாகவும், உடம்பைபிட்டாகவும் வைத்துக்கொண்டு ஓடுவதால் வாய்ப்புகள் குவிகிறது அதுவும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் அவருடைய வெற்றி சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கடைசியாக இவர் நடித்த பொன்மகள் வந்தால், உடன்பிறப்பு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்பொழுது இரண்டு மூன்று படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட ஜோதிகா ஆரம்ப காலகட்டத்தில் பல டாப் நடிகரின் படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
இருந்தாலும் ஒரு சில நல்ல படங்களையும் அவர் தவற விட்டு உள்ளார் 2002 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டாய். படத்தில் மாதவன் சிம்ரன் நடித்திருந்தனர் ஆனால் இயக்குனர் முதல் சாய்ஸ் ஜோதிகா தான். அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தார்.
ஆனால் ஜோதிகா சில காரணங்களால் நழுவ விடவே பின் சிம்ரனுக்கு இந்த வாய்ப்பு சென்றது. சிம்ரன் மாதவனும் இணைந்து கன்னத்தில் முத்தமிட்டாய் படத்தில் நடித்திருந்தனர் படம் வெளிவந்து. நல்ல விமர்சனத்தை பெற்று படம் ஓடியது இந்த படம் பல விருதுகளை வென்றது.
குறிப்பாக ஆறு தேசிய விருதுகள், மூன்று ஃபிலிம் ஃபேர் விருதுகள், ஆறு சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், 7 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், 6 சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்றது இப்படி விருதுகளை அள்ளியது. இந்த படத்தில் நடித்த மாதவனுக்கும் சரி, சிம்ரனுக்கும் திரையுலகில் ஒரு ரவுண்டு வந்தனர்.