நடிகை ஜோதிகா சினிமா ஆரம்பத்திலேயே அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டதோடு மட்டுமில்லாமல் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறினார். முதலில் ஜோதிகா அஜித்தின் வாலி படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து விஜயின் குஷி படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படங்களுக்குமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பிறகு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது இருப்பினும் ஆரம்பத்தில் மாடர்ன் டிரஸ்களில் நடித்து வந்த இவர் போகப்போக கதைகளில் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்தார். இந்த நிலையில் தான் சந்திரமுகி படம் கிடைத்தது. இந்த படத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்.
அதனால் தான் சந்திரமுகி படம் அப்பொழுது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இப்பொழுதும் கூட பலருக்கும் பிடித்த திரைப்படமாக சந்திரமுகி இருக்கிறது இந்த படத்தில் ரஜினி, பிரபு, நயந்தாரா போன்ற பலரும் நடித்திருந்தாலும் ஜோதிகா அளவிற்கு யாரும் நடிக்கவில்லை என்பது தான் உண்மை சந்திரமுகியாகவே வாழ்ந்திருந்தார்.
இவரது நடிப்பை பார்த்த பலரும் புகழ்ந்து பேசியதோடு தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது எப்படியும் ஜோதிகாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என அப்பொழுது பெரிய அளவில் பேசி வந்தனர் ஆனால் கடைசி மூவரில் ஜோதிகாவும் இருந்தார் நிச்சயம் சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு தேசிய விருது கிடைப்பது உறுதியென கூற வந்த நிலையில் கடைசியில் கோட்டை விட்டார்.
காரணம் என்னவென்று பார்த்தால் சந்திரமுகி படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும் ஜோதிகா சொந்த குரலில் பேசவில்லை டப்பிங் கலைஞர் பேசினாராம் அதனால் அவருக்கு பின்னடைவானது. இதனால் தேசிய விருது அவருக்கு நிராகரிக்கப்பட்டதாம். இதை நினைத்து இப்பொழுது கூட ஜோதிகா ரொம்ப அப்செட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.