அட்லீ படத்தின் கதை பிடிக்கதால் உதறி தள்ளிய ஜோதிகா.! அது யார் படமாக இருந்தால் என்ன.

atlee-and-jothika
atlee-and-jothika

தமிழ் திரை உலகில் பல படங்கள் வெளிவந்து வசூல் வேட்டை நடத்துகின்றன அப்படி அட்லி, விஜய் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் மெர்சல்.

இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இத்திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து சமந்தா, நித்யாமனன், வடிவேலு, எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

குறிப்பாக இப்படத்தில் நித்யா மேனன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டி தொட்டி எஙகும் பிரபலம் அடைந்தோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு நல்ல இமேஜையும் பெற்றுக்கொண்டார் ஆனால் இத்திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா  இதுகுறித்து தற்போது அவர் மனம் திறந்து உள்ளார்.

முதலில் இப்படத்தின் கதையை முழுவதுமாக முடித்து விட்டு அட்லி அவர்கள் நித்தியா மேனன் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு பண்ணினார். ஆனால் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

அட்லீ கதை சொல்லும் பொழுது ஜோதிகாவிற்கு அந்த ஸ்கிரிப்ட் பற்றிய கருத்து வேறுபாடு எழுந்துள்ளது மேலும் தனது கதாபாத்திரத்தின் மீது இருந்த வேறுபாடு காரணமாக தான் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லையோ தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என கூறினார்.