தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் மிகவும் முக்கியமான ஜோடிகள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்து வரும் பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்தது தற்போது திருமணம் செய்து கொண்டு மிகவும் சந்தோஷமாக தங்களது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் பார்த்தால் சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் அதிகரித்தது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் ஜோதிகா சூர்யா வாழ்க்கையில் வந்த பொழுது தான் சூர்யாவிற்கு உச்ச நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதே போல் 2டி நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் ஜோதிகாவும் முடிவு செய்வாராம்.
மேலும் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கை தொடங்கிய ஜோதிகா இவருக்கு வரவேற்பு தரும் வகையில் சூர்யாவும் வரவேற்றார் மேலும் தங்களது 15ஆம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடும் விதமாக நேற்று தனது கணவருடன் ஜோதிகா இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவின் அஞ்சான் கெட்டப்பையும் அழகான சிங்க ஜோடிகளையும் வரைந்து சூர்யாவிற்கு பரிசு கொடுத்துள்ளார் அதிலும் கமெண்டில் என் சிங்கத்திற்கு பரிசு என தெரிவித்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அச்சு அசல் அப்படியே இருக்கிறார் சூர்யா.
கொஞ்சம் கூட மாறாமல் உங்களது கைவண்ணம் அவ்வளவு அழகாக இருக்கிறது என ஜோதிகாவை பலரும் பாராட்டி வருகிறார்கள் மேலும் ஜோதிகா தற்போது சினிமாவில் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.