சூர்யாவைத் தேடி வீட்டிற்கு வந்த விருது.! கொண்டாட்டத்தில் ஜோதிகா மற்றும் சூர்யா ரசிகர்கள்.!

surya
surya

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக கால் பதித்த நடிகர்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகர்களாக விளங்கி வருகிறார்கள் அதிலும் குறிப்பாக நடிகர் சூர்யா தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் சூரரைப் போற்று இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்காராவும் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை இயக்கி வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது .

மேலும் விமான நிறுவனத்தின் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று விட்டது இந்த திரைப்படம் வெளியானபோது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமும் அதே போல் சிறந்த நடிகர் சூர்யா என இந்த திரைப்படம் விருது வென்றது.

மேலும் சூரரைப் போற்று சிறந்த திரைப்படத்திற்கான விருதை நடிகர் சூர்யாவின் வீட்டிற்கே டெலிவரி ஆகி உள்ளது இதனை சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார் ஆம் சூரரைப் போற்று சிறந்த திரைப்படத்திற்கான விருது நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு டெலிவரி ஆனதால் ரசிகர்கள் பலரும் இந்த தகவலை கொண்டாடி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் இந்த டெலிவரி பார்சலைப் பிரித்த பொழுது எடுத்த வீடியோவை பகிர்ந்ததால் ரசிகர்கள் ஒரே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் இந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து பலரும் இதனை கொண்டாடி வருகிறார்கள்.